தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான 'ராஞ்சனா' படத்தில் நடித்த ஸ்வரா பாஸ்கர், இயக்குனர் ஒருவர் மீது 8 ஆண்டுகளுக்கு பின் பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

தனுஷ் நடித்த இந்தி திரைப்படமான 'ராஞ்சனா' தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் காதலிக்கும், உறவுக்கார பெண்ணாக நடித்திருந்தனர் நடிகை ஸ்வரா பாஸ்கர். மேலும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இந்நிலையில், தொடர்ந்து மீடூ மூலம், நடிகைகள் பாலியல் புகார் கூறி  வரும் நிலையில், ஸ்வரா பாஸ்கர் தனக்கும் இயக்குனர் ஒருவரால்,  பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "எனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டது, ஆனால் அது பாலியல் சீண்டல் என்பதை தெரிந்துகொள்ள எட்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. பாலியல் சீண்டல்களை உணர நமது கலாச்சாரம் ஏற்றுக்கொள்ளவில்லை. வேலை பார்த்த இடத்தில் ஒரு இயக்குனர் தவறாக என்னை அணுகினார்.  ஆனாலும், என்னை தொடுவதற்கு அவரை நான் அனுமதிக்கவில்லை.  சுதாரித்துக் கொண்டு விலகிவிட்டேன். 

இதனால் கண்டிப்பாக தவறான தொடுதல் குறித்து பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அவசியம். இதுகுறித்து சொல்லிக்கொடுக்கவேண்டும், சகித்துக் கொண்டு போவது என்பது பாலியல் சீண்டல்கள் கண்டுகொள்ளாமல் செல்ல வழிவகுத்து விடும்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பாலியல் தொல்லைகள் நடக்கிறது. அது தொடர்பான ஒவ்வொரு அசைவையும் தெரிந்துகொள்ளவேண்டும். பாதிக்கப்படும் பெண்கள் இந்த சமூகம் அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் என்று அச்சத்தின் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்.  கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளிப்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.