1994ம் ஆண்டு தனது 18வது வயதில் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சுஷ்மிதா சென். அதன் பின்னர் அதே ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியிலும் வெற்றி பெற்றார். முதன் முறையாக பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய பெண் என்ற பெருமை சுஷ்மிதா சென்னையே சேரும். இதுபோன்ற பட்டம் வென்றவர்களை விட்டுவிடாத இந்தி சினிமா, இவரையும் ஹீரோயினாக இழுத்துக்கொண்டது. தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்த சுஷ்மிதா, நாகார்ஜூனாவுடன் ராட்சசன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானார். 

திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைகளுக்கு ரெனீ சென், அலிசா சென் என்று பெயர் வைத்துள்ளார்.சுஷ்மிதா சென் 2010 ஆம் ஆண்டு கடைசியாக  வெளியான "நோ ப்ராப்ளம்" என்ற இந்தி திரைப்படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு வெளியேறினார். அப்போது தனது இரண்டாவது குழந்தையை தத்தெடுத்திருந்த சுஷ்மிதா, அவர்களை வளர்ப்பதற்கு நேரம் தேவைப்படுவதாக கூறினார். அதன் பின்னர் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 

இதையும் படிங்க: இந்த நடிகையால் மட்டும் எப்படி?... புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டும் அர்ச்சனா குப்தா!

தற்போது 44 வயதாகும் சுஷ்மிதா சென் தன்னை விட 14 வயது சிறியவரான ரொமன் ஷால் என்பவரை காதலித்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த லாக்டவுன் நேரத்தில் இரண்டு மகள் மற்றும் காதலருடன் பொழுதை கழித்து வரும் சுஷ்மிதா சென், தனது மகள்களின் வீடியோவை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

சுஷ்மிதா சென் உலக அழகி பட்டம் வென்று இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அதனை கொண்டாடும் விதமாக அவரது காதலர் ரொமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுஷ்மிதா சென் உலக அழகி பட்டம் பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் 26 ஆண்டுகள் ஆகிறது, நீங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தினீர்கள், அதை இன்னும் தொடர்ந்து செய்யுங்கள், ஐ லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

அதுஎல்லாம் சரி இதில் ஏன் விக்னேஷ் சிவன், நயன் தாராவை நுழைக்கிறீர்கள் என்று கேட்பது தெரிகிறது. நயன்தாராவை விட விக்கி தான் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருப்பார். நயனின் டூர் போட்டோ முதல் பட அப்டேட் வரை அனைத்தையும் தருவது அவர் தான். அதுமட்டுமல்ல ஸ்பெஷல் நாட்களில் நயனை தங்கமே, வைரமே என்று புகழ்ந்து கவிதை விக்கி எழுதும் கவிதைகள் ரொம்ப பிரபலம். அதை இப்போது மற்ற காதலர்களும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள் போலும்.