சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்த போது, சில இயக்குனர்கள் எனது மார்பையும் , தொடையும் பார்க்க வேண்டுமென தன்னிடத்தில் கேட்டதாக நடிகை சுர்வின் சாவ்லா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதலில் தொகுப்பாளராக அறிமுகமானவர் நடிகை சுர்வீன் சாவ்லா, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பின்னர் கதாநாயகியாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமானார்.  குறிப்பாக தமிழில் மூன்று பேர் மூன்று காதல்,  ஜெய்ஹிந்த்-2, உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார் சினிமா வாய்ப்பிற்காக நடிகைகள் பலர் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாவதாக மீடூ இயக்கம் மூலம் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.  தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பாடகி சின்மயி, நடிகை  வித்யாபாலன் ஆகியோர் தங்களுக்கு நேர்ந்த பாலியல்  தொந்தரவுகளை மீடூவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்,

இந் நிலையில்  அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார் இளம் நடிகை சுர்வின் சாவ்லா. சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புக்காக சில சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், மற்றும் இயக்குனர்களின்  அலுவலக  படிக்கட்டுகளில் ஏறி இறங்கியதாக அவர் தெரிவித்தார், அப்போது ஒரு சினிமா இயக்குனருடன் நடந்த நேர்காணலில் தன்னை முழுவதுமாக விசாரித்த அவர் முடிவில், என் மார்பகங்களை பார்க்க வேண்டும் என்று  கேட்டார். அதைக்கேட்டு நான் அதிர்ந்துபோன தான் அங்கிருந்து வெளியேறி விட்டதாக சாவ்லா தெரிவித்தார்.

 

சில நாட்கள் கழித்து அதோடு மற்றொரு இயக்குனரை சந்தித்த போது அவர் என் தொடையை பார்க்க வேண்டுமென்று கேட்டார் ஆனால் அதற்கு நான் சம்மதிக்காததால் சரி உங்கள் எடையை குறைத்து விட்டு வாருங்கள் பிறகு யோசிக்கலாம் என்று அனுப்பி வைத்ததாக தன் ஆதங்கத்தை தற்போது வெளிபடுத்தியுள்ளார். அவரின் இந்த கருத்து யார் இந்த இரண்டு இயக்குனர்கள் என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளதுடன். திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.