Sunitha Boya : ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள Bunny வாசுவின் அலுவலகத்துக்கு முன் நடிகை ஒருவர் திடீரென அரைநிர்வாண போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கு திரையுலகில் துணை நடிகையாக நடித்து வருபவர் சுனிதா போயா. இவர் டோலிவுட்டில் கீதா ஆர்ட்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் Bunny வாசு என்பவர் தயாரித்த படத்தில் நடித்துள்ளார். இதற்காக தயாரிப்பாளரிடம் சம்பளம் கேட்டபோது அவர் கொடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த நடிகை சுனிதா போயா, ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள Bunny வாசுவின் அலுவலகத்துக்கு முன் திடீரென அரைநிர்வாண போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் துப்புறவு பணிகளை மேற்கொண்டு வந்த தொழிலாளர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அரைநிர்வாணமாக போராட்டம் நடத்திய நடிகை Bunny வாசுவை கைது செய்து அழைத்து சென்றனர். நடிகை சுனிதா போயா, Bunny வாசுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவது முதன்முறை அல்ல, இதற்கு முன் கடந்த 2019-ம் ஆண்டு அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி போராட்டம் நடத்தி இருக்கிறாராம்.
கடந்த சில ஆண்டுகளில் 4 முறை கைது செய்யப்பட்ட சுனிதா, தற்போது 5வது முறையாக கைதாகி உள்ளார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Kutra Parambarai : குற்றப் பரம்பரையை தூசி தட்டும் சசிகுமார்... அரசியல் வாரிசை ஹீரோவாக நடிக்க வைக்க திட்டம்
