பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கட்சிப் பிரமுகர் கவிஞர் சிநேகன் கிண்டலடித்தைத் தொடர்ந்து அக்கட்சியின் இன்னொரு முக்கிய பிரமுகரான நடிகை ஸ்ரீப்ரியா விஜய் டி.வியில் வெளியாகும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து தனது கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார். அந்நிகழ்ச்சியில் தொடர்ந்து உருவ அமைப்பைக் கேலி செய்து காமெடிகள் செய்யப்படுவதாகவும் அதை விஜய் டி.வி உடனே நிறுத்தவேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிகழ்ச்சி குறித்து கடந்த இரு தினங்களாக பதிவுகள் எழுதி வரும் ஸ்ரீப்ரியா பொதுமக்களும் இதை எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். விஜய் டி.வி.யின் ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சிக்கு எதிராக அவரது சில பதிவுகள் இதோ....1.நேரம் கிடைக்கும் சமையங் களில் நான் அதிகம் பார்ப்பது  #விஜய்tv தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது சோகம்...மாற்றிக்கொள்வார்களா?1வரை கேலி செய்து comedy செய்வது கேவலம்!

2.#vijaytvsupersinger ல்1வரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை,#makapa #priyanka உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை,நீங்கள்1வரை1வர் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது #உருவகேலியைஎதிர்போம்.

3.என்னுடன்twitterல் இனைந்து நிற்க்கும்495.8kமக்களும் #உருவகேலியைஎதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்,நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன்,இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்!

4.A friend told me an episode in KPY #Vijaytv where Mr.Balaji made a comment on Mrs.Grace who started the show by saying’வழக்கமா எல்லா நிகழ்ச்சியும் வினாயகரை பற்றி பாடி துவங்குவாங்க இன்னைக்கு வித்யாசமா வினாயகரே பாடி துவங்கி வெக்கிறாங்க’did he really say that? என்று தொடர்ந்து அந்நிகழ்ச்சிக்கு எதிராகப் பதிவிட்டு வருகிறார் ஸ்ரீபிரியா.