மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அந்த நபர் உடனடியாக தனிமை படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும், போனி கபூர்... கடந்த ஒரு சில வருடங்களாக தமிழ் படங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான, 'பிங்க்' படத்தின் ரீமேக்கை, தமிழில் நடிகர் அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் ரீமேக்  செய்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இந்த படத்தை தொடர்ந்து தற்போது, மீண்டும் அஜித்தை வைத்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் 'வலிமை' படத்தை தயாரித்து வருகிறார். தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கினாள் அணைத்து சினிமா பணிகளும் முடிங்கியுள்ளது போல், வலிமை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணியும் இன்னும் நடைபெறாமல் உள்ளது.

அதே போல் எங்கும் வெளியில் செல்ல முடியாமல், பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர் என்பது நாம் அறிந்ததே... அந்த வகையில் தயாரிப்பாளர் போனி கபூர், மற்றும் இவரின் இரு மகள்கள், ஜான்வி - ரிஷி ஆகிய மூன்று பேரும் தற்போது மும்பையில் உள்ள, கிரீன் ஏக்கர்ஸ் லோகாந்த்வாலா காம்ப்ளெக்ஸில் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய சில பணியாளர்களும் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

அப்படி வேலை செய்து வரும் சரண் சாஹு என்பவருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை தனிமை படுத்திய தயாரிப்பாளர் போனி கபூர், அவருடைய உடல் நலம் குறித்து, சுகாதர துறைக்கு தகவல் கொடுத்தார். பின் அரசு மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, சரணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்த தகவலை உறுதி செய்து, தயாரிப்பளார் போனி கபூர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  "நான் என் மகள்கள் உட்பட, வீட்டில் பணியாற்றிவரும் அனைவரும் நலமுடன் இருக்கிறோம். ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டிலேயே இருக்கிறோம். எனவே எங்கள் யாருக்கும் எந்த ஒரு அறிகுறியும் இல்லை.

உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட மகாராஷ்டிர அரசுக்கும், மும்பை மாநகராட்சிக்கு நன்றி. மாநகராட்சி கொடுத்துள்ள அறிவுறுத்தலை கண்டிப்பக பின்பற்றுவோம். அதே போல் தங்கள் வீட்டில் பணியாற்றும் பணியாளர் சரண் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார் என்கிற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.