ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.  திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார். அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்தினார். மேலும் ராணாவின் தம்பியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே போல் கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். 

கவர்ச்சி புகைப்படங்கள் கைகொடுக்காததால்,  முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து டபுள் மீனிங் பதிவுகளை போட்டு அள்ளு தெறிக்கவிடுகிறார். அப்படி டபுள் மீனிங் பதிவுகள் மூலம் பிரபலங்கள் பலரையும் வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி, தற்போது வெளியிட்டிருக்கும் அதிரடி அறிவிப்பை கேட்டு பல ஹீரோக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர். 

 

இதையும் படிங்க: பிக்பாஸுக்காக இப்படியா?... பிரபல சீரியலை அவசரமாக முடித்த விஜய் டி.வி... கடுப்பில் ரசிகர்கள்...!

பாலிவுட்டில் ஆரம்பித்த போதைப்பொருள் விவகாரம் தற்போது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திரிவேதி உட்பட 11 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோதாது என்று மலையாள திரையுலகிலும் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாகவும், கேரவனுக்குள் நுழைய முடியாத அளவிற்கு நாற்றம் அடிக்கும் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை பகீர் கிளப்பினார். 

 

இதையும் படிங்க: சீரியலில் இருந்து விலகுகிறாரா “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா?... வெளியானது அதிரடி உண்மை...!

தற்போது சோசியல் மீடியாவின் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்கள் போதைக்கு அடிமையானவர்கள் என கூறியுள்ளார். பலர் அடிக்கடி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வதே சில தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்த தான் என்றும், தனக்கு பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் எடுத்துக்கொள்ளும் தெலுங்கு சினிமா நட்சத்திரங்களில் பெயர்களை வெளியிட தயார் என்று கூறியுள்ளார். இதனால் தெலுங்கு சினிமாவில் பல நடிகர், நடிகைகள் பீதி அடைந்துள்ளனராம்.