அதில் என்ன தப்பு...நெட்டிசன்களை வாண்டடாக வம்பிழுக்கும் பிரபல நடிகை... ஆபாச கமெண்ட்களுக்கு அதிரடி பதில்...!

ஏற்கனவே சோனம் கபூரை கழுவி ஊத்தி வந்த நெட்டிசன்கள் இந்த பதிவால் இன்னும் கொந்தளித்து போயுள்ளனர்.

Actress Sonam Kapoor Slams netizens Who Trolled her For Susant Singh Rajput Suicide Issue

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட்  மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்தியில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

Actress Sonam Kapoor Slams netizens Who Trolled her For Susant Singh Rajput Suicide Issue


பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட், சோனம் கபூர், சாரா அலிகான், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோரை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர். 

Actress Sonam Kapoor Slams netizens Who Trolled her For Susant Singh Rajput Suicide Issue

தனது சோசியல் மீடியா பக்கங்களில் பச்சை பச்சையாக குவியும் கமெண்ட்களையும், ட்ரால் போஸ்ட்களையும் பார்த்து பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூர் நொந்துபோனார். அதனால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் உள்ள கமெண்ட் ஆப்ஷன்களை தற்காலிகமாக முடக்கியுள்ளார். 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

இதனால் சோசியல் மீடியாவில் தன்னை வாரிசு நடிகை என விமர்சிப்பவர்களுக்கு சோனம் கபூர் சரியான பதிலடி கொடுத்துள்ளார். தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள பதிவில், “ஆம் நான் என் தந்தையின் மகள் தான். அவரால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். இது ஒன்றும் அவமானமல்ல. எனக்கு இதை கொடுக்க எனது தந்தை கடுமையாக உழைத்துள்ளார். அதற்கு பின்னால் நான் பிறந்தேன் என்பது எல்லாம் என் விதி. அவரது மகளாக இருப்பதில் நான் பெருமைகொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

Actress Sonam Kapoor Slams netizens Who Trolled her For Susant Singh Rajput Suicide Issue

 

இதையும் படிங்க: நடிகை சமந்தாவுக்கு கொரோனாவா? ... கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த தோழிக்கு தொற்று உறுதியானதால் அதிர்ச்சி...!

ஏற்கனவே சோனம் கபூரை கழுவி ஊத்தி வந்த நெட்டிசன்கள் இந்த பதிவால் இன்னும் கொந்தளித்து போயுள்ளனர். ஆமா... நான் எங்கப்பாவால் தான் சினிமாவில் இடம் பிடித்தேன். உங்களுக்கு அதனால் என்ன பிரச்சனை எனக் கேட்பது போல் பதிவு இருப்பதால் சகட்டுமேனிக்கு நெட்டிசன்கள் விமர்சனங்களை அள்ளித் தெளிக்கின்றனர். ஆனால் சோனம் கபூர் தான் கமெண்ட்களை ஆப் செய்துள்ளாரே அவருக்கு எப்படி தெரியும்? 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios