தளபதி விஜய்க்கு தமிழகத்தில்,  மட்டுமல்ல கேரளா உள்ளிட்ட பிற  மாநிலங்களிலும் பல தீவிர ரசிகர், ரசிகைகள் உள்ளனர்.  குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியில் வரவேற்பு அதிகம் என்றே கூறலாம்.

விஜய்யும் தன்னுடைய ரசிகைகளுக்கு பிடிக்குமாறு கதைகளையும்,  கதாபாத்திரங்களையும் கவனமாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் விஜயுடன் ஷாஜஹான் படத்தில் நடித்துள்ள, பிரபல கவர்ச்சி நடிகை சோனா, பேட்டி ஒன்றில்  தனக்கு பிடித்த நடிகர்,  விஜய் தான் என்றும், ஆம்பளை என்றால் தளபதி விஜய் போல இருக்கனும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஆண்கள், பெண்களை கண்டால் வழிய கூடாது... விஜய்யை போல கெத்தாக இருக்க தெரிய வேண்டும் என பேசியுள்ளார்.

அதே போல் சிலரை பார்த்தால் தான் பயம் கலந்த மரியாதை மனதில் வரும், அந்த உணர்வு எப்போதும் விஜய்யை பார்த்தால் தனக்கு வரும் என விஜய் மீது வைத்துள்ள மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார் சோனா. இவரின் இந்த பேச்சை விஜய் ரசிகர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.