துரை செந்தில்குமார் இயக்கத்தில் அப்பா, மகன் என இருவேடங்களில் தனுஷ் நடித்துள்ள "பட்டாஸ்" திரைப்படம், பொங்கல் விருந்தாக கடந்த 15ம்  தேதி திரைக்கு வந்துள்ளது. அந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் தனுஷ், சினேகா நடிப்பை ரசிகர்கள் ஆகா...ஓஹோ என பாராட்டி வருகின்றனர். 

துள்ளல் பாட்டு, மாஸ் டான்ஸ், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்து கமர்சியல் காரசாரங்களையும் கொண்டு நல்ல கதையுடன் வெளியான பட்டாஸ் திரைப்படம் வசூலிலும் சாதனை செய்து வருகிறது. தமிழர்களின் பண்டைய தற்காப்பு கலையான அடிமுறை பயிற்சி குறித்து படம் எடுக்கப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களில் சிறப்பான வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் தனுஷுற்கு மனைவியாக, அம்மாவாக, அடிமுறை பயிற்சியை பயன்படுத்தி வில்லன்களை வெளுத்து வாங்கும் ஆக்‌ஷன் குயினாக என சினேகா தனது பல விதமான அவதாரங்களை ஒன்றாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார். "பட்டாஸ்" படத்தில் சினேகாவின் புன்னகைக்கும், புடவை காட்டிய அழகிற்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் சபாஸ் போடலாம். 

எந்த கதாபாத்திரத்திலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பவர். அதனால் தான் "பட்டாஸ்" படத்திற்காக அடிமுறை என்ற தற்காப்பு கலையை 100 சதவீத டெடிகேஷனுடன் பயிற்சி செய்துள்ளார். சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள அந்த வீடியோ இப்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது.