ஊரடங்கு காரணமாக, வீட்டிலேயே அடைந்து கிடைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், தன்னுடைய அப்பாவின் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு, புதிய மெட் அமைத்து, தானே பாடிய பாடலின் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே, பல படங்களில் பின்னணி பாடகியாக பாடல்கள் பாடியுள்ளார். மேலும் பல்வேறு ஆல்பங்களிலும் பாடியுள்ளார்.இசையின் மீது உள்ள ஆர்வத்தால், சில காலம் திரைப்படங்களில் கூட நடிக்காமல், இசை ஆல்பங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் இவருடைய வாழ்க்கையில் திடீர் என ஏற்பட்ட ஒரு சில மாற்றம், மீண்டும் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்துவிட்டது.

அந்த வகையில் தற்போது, விஜய் சேதுபதியுடன் 'லாபம்' மற்றும் தெலுங்கில் 'கிராக்' என்கிற ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 'டிரேட்ஸ்டோன்' என்கிற வெப் சீரிஸ்சிலும் நடித்து வருகிறார். எங்கும் வெளியில் செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதையும் மிகவும் சந்தோஷமாக அனுபவித்து வருவதாக கூறிய ஸ்ருதிஹாசன், இவருடைய தந்தை உலகநாயகன் கமலஹாசன், நடித்த 'நாயகன்' படத்தில், இசைஞானி இளையராஜா இசையில் வெளியான 'தென்பாண்டி சீமையிலே' என்கிற பாடலுக்கு ஸ்ருதியே அசத்தலான மியூசிக் கம்போஸ் செய்து, பாடியுள்ளார். இவர் பாடியுள்ள இந்த பாடலுக்கு லைக்குகள் சும்மா அள்ளுகிறது. ஸ்ருதியின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.