நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி பாலியல் புகார் அளித்ததை அடுத்து, நடிகர் அர்ஜூனும்  அதற்கான விளக்கத்தை கொடுத்து மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த தருணத்தில், நடிகை ஸ்ருதி மீண்டும் அர்ஜூன் மீது புகார் அளிக்க அதற்கு அர்ஜூனும் அவருக்கு எதிராக புகார் அளிக்க தயாராகி விட்டார். இப்படி இருவரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுவரை ஸ்ருதி திருமணம் ஆகாதவர் போன்று தான் சினிமா உலகில் தன்னை காட்டிக்கொண்டார். ஆனால் அர்ஜூன் விவகாரம் தொடர்பாக காவல் நிலையம் வந்து புகார் தெரிவித்தார் நடிகை ஸ்ருதி. அப்போது தான் முன் முறையாக தான் திருமணம் ஆனவர் என்றும், அவருடைய கணவர் பெயர் ராம்குமார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இதனால் கன்னட திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுநாள் வரை திருமணம் பற்றி வாய் திறக்காத  ஸ்ருதி தற்போது இவ்வாறு கூறி இருப்பது எதற்காக என்றும், அவர் சொல்வது உண்மைதானா என்றும்  பலரும் கிசுகிசுக்கின்றனர்.