தமிழ் சினிமாவில், முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரேயா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரேயா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.
2003 ஆண்டு தருண் மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான 'உனக்கு 20 எனக்கு 18 ' படத்தின் மூலம் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமான இவர், இந்த படத்தை தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் பிஸியான நடிகையாக மாறினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, பிரபல தொழிலதிபரும், டென்னிஸ் விளையாட்டு வீரருமான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடைசியாக இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'AAA ' திரைப்படம் தோல்வியடைந்ததால், இந்த படத்தை தொடர்ந்து, மற்ற எந்த தமிழ் படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
தற்போது நடித்தார் அரவிந்த் சாமி நடித்து வரும் 'நரகாசுரன்' படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின் நடித்து வருகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கணவருடன் சுற்றுலாவில் செம்ம ஜாலியாக இருக்கும் ஸ்ரேயா, ஒரு குகை உள்ளே... கவர்ச்சியான உடை அணிந்தவாறு ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகும் இப்படியா என சில ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
