நடிகை ஸ்ரேயா தொடர்ந்து 17 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சினிமாத்துறையில் உள்ள 35 வயதை கடந்த கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தவர். கடந்த சில தினங்களாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.

மேலும் சமீபத்தில் இவர் நடிகர் சிம்புவுடன் நடித்து தமிழில் வெளிவந்த "AAA " படமும் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் இவர் தெலுங்கில் நடித்துள்ள "பைசா வசூல்" மற்றும் இந்தியில் நடித்துள்ள "டட்கா" ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று நடிகை ஸ்ரேயா அவருடைய குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 5 மணி அளவில் ஸ்வாமி தரிசனம் செய்ய வந்தார்.

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் கொடுத்தனர். பின்னர் சுப்ரபாத வழிபாட்டில் ஸ்ரேயா மற்றும் அவருடைய குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.