உலக நாடுகளை அடுத்து தற்போது, கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க, மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது ஒன்று தான் தீர்வு என, பாரத பிரதமர் மோடி, 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மத்திய மற்றும் மாநில அரசுகள் துரிதமாக எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவான இடமான சீனா மீண்டும்... சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் கொரோனாவின் பீதியில் இருந்து மீண்டு சுதந்திரமாக வெளியே வர துவங்கிவிட்டனர்.

அதே போல்... சீன மக்கள் விரும்பி உண்ணும், பூனை, நாய், எலி, பாம்பு, பள்ளி போன்றவை கடை வீதிகளில் விற்பனைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி பற்றி கேள்வி பட்ட நடிகை ஷ்ரத்தா தாஸ் மிகவும் கோவமாக கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார். கொரோனாவிற்கு பின்பு கூட சீன மக்கள் திருந்தவில்லையா என்று தன்னுடைய கோவத்தை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.