பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, அவருடைய கணவரை விவாகத்தை செய்ய உள்ளதாக இயக்குனர் பரப்பிய வதந்தி பாலிவுட் திரையுலகை, அதிர்ச்சியாக்கியுள்ளது.

நடிகை ஷில்பா செட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ராஜ்குந்த்ரேவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். 

இந்த நிலையில் ஷில்பாவும், அவரது கணவரும் டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டனர். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் அனுராக் பாசு, ஷில்பாவின் மொபைலை அவருக்கு தெரியாமல் எடுத்து, 'நான் ராஜ்குந்த்ரேவை விவாகரத்து செய்ய போகிறேன்' என்று மெசேஜை ஷில்பாவின் அம்மாவுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த மெசேஜை பார்த்து திடுக்கிட்ட ஷில்பாவின் அம்மா உடனே ஷில்பாவுக்கு போன் செய்து விபரம் கேட்க, அப்போதுதான் தெரிய வந்துள்ளது இது அனுராக் பாசு கிளப்பிய வதந்தி என்பது.

இந்த வதந்தி ஒருசில நிமிடங்களில் பாலிவுட் முழுவதும் பரவி, பலர் போன் செய்து ஷில்பாவிடம் விளக்கம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.