செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படிங்க: கணவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே... ஜெயம் ரவி, அல்லு அர்ஜூனுக்கு சவால் விட்ட ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த அளவுக்கு பிரபலமானாரோ, தர்ஷன் - சனம் ஷெட்டி காதல் விவகாரத்திலும் ஏகப்பட்ட பேமஸ் ஆனார். காரணம் தர்ஷன் ஷெரினை காதலிப்பதால் தான் சனம் ஷெட்டியை கழட்டி விட்டதாகவும், தர்ஷனுக்காக தான் ஷெரின் உடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறியதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. 

இந்த சர்ச்சை எல்லாம் தற்போது முடிவுக்கு நார்மல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ள ஷெரின், வழக்கம் போல தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அப்படி ஷெரின் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது பார்ப்பதற்கு அப்படியே நடுத்தர வயது ஆன்ட்டி போல இருந்தீர்கள். ஆனால் தற்போது நாளுக்கு நாள் அழகு கூடிக்கொண்டே போகிறது. என்ன செய்கிறீர்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை. நீங்கள் அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று புகழ்ந்துள்ளார். 

இதையும் படிங்க: ஆபாச வீடியோ?... முதல் முறையாக மனம் திறந்த பிக்பாஸ் லாஸ்லியா...!

அதற்கு, ஆம் மக்கள் அடுத்தவர்களின் தோற்றத்தை வைத்து, மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் உடனடியாக முடிவெடுக்கிறார்கள். நாம் உண்மையில் மேலோட்டமான உலகில் வாழ்கிறோம். சுய அன்பு மற்றும் நம்மை பற்றிய உண்மைகளை ஒப்புக்கொள்வதை அதிகரிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தன்னை கிண்டல் செய்தவரை கூலாக டீல் செய்த ஷெரினின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.