'பூவே உனக்காக' , 'நந்தா', 'மாயா' போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், தீனா, டும் டும் டும், போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகை ஷீலா கவுர்.

பின்னர் தமிழில் இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், அந்த படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை தமிழை தொடர்ந்து, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும், சந்தோஷ் ரெட்டி என்கிற... தொழிலதிபருக்கு புதன்கிழமை அன்று சென்னையில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணம் என்று கூறப்படுகிறது.

இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

மேலும் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ஷீலா கவுர் கூறுகையில்... "எங்களுக்கு மிகவும் சிறப்பான நாள். இந்த மகிழ்ச்சியான தருணத்தை இதயம் ஆழமாக உணர்கிறது. இந்த புதிய நாளில் புதிய வாழ்க்கையில் இணைகிறோம் என, தெரிவித்துள்ளார்.