தளபதி விஜய் இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 64 ஆவது படத்தில் மிகவும் துள்ளலாக நடித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம், சாந்தனு - விஜய் ஆகிய இருவரும் அண்ணன் தம்பி போல் பழகி வந்தாலும், சாந்தனு தளபதின் தீவிர ரசிகர்.

இருவருக்கும் உள்ள உறவையும் தாண்டி, இந்த படத்தில் இணைந்து நடித்து வருவதை மிகவும் பெருமையாக கருதுவதாக பல முறை சாந்தனு கூறியுள்ளார்.

மேலும் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் வெளியிட்டு படத்தின் அப்டேட்டையும் தெரிவித்து வருகிறார்.

தளபதி 68 ' படத்தின் படப்பிடிப்பு, கர்நாடக மாநிலம் ஷிவமோகவில் நடந்து வருகிறது என்பது நாம் அறிந்தது தான். இந்நிலையில்  'ஷிவமோக' என்கிற ஒரே ஒரு வார்த்தையை பதிவு செய்து, இப்போதைக்கு இவ்வளவுதான் அப்டேட் என கூறியுள்ளார் சாந்தனு.

ஏதோ ஒரு வண்டியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும், இவரின் பின்னால் படக்குழுவினர் அமர்த்திருப்பதும் தெரிகிறது. சாந்தனு இப்படி ட்விட் போட்டுள்ளதால், இன்று முதல் ஷிவமோஹாவில் நடக்கும் படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்ள உள்ளாரா? அல்லது இவரின் காட்சிகள் முடிவடைந்ததை குறிக்கும் விதத்தில் இப்படி பதிவு செய்துள்ளாரா என ரசிகர்கள் குழப்பத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.