பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகளுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த 14ம் தேதி முதல் எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடமானது. எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே இன்று  (20-8-2020(வியாழக்கிழமை))  மாலை 6 மணிக்கு  எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு திரையுலகினர் மற்றும் பொதுமக்களுக்கு இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்க  வலியுறுத்தியும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பழைய படி நல்ல உடல் நலத்துடன் திரும்பவும் திரைப்பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். 

 

இதையும் படிங்க: “மெர்சல்” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?... முதன் முதலாக மனம் திறந்த ஜோதிகா...!

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை நலம் பெற வேண்டி பழம் பெரும் நடிகையான சரோஜா தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாலுவிற்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன். ரொம்ப சங்கடப்பட்டேன். அவர் அவ்ளோ நல்ல மனிதர். ஒரு விழாவில் அவரிடம் நீங்க தேன் சாப்பிடுவீங்களானு கேட்டேன். ஏன் அப்படி கேட்கிறீங்கன்னு கேட்டார். இல்ல, உங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்குதுன்னு சொன்னேன். அதற்கு அவர் ஏன் நீங்களும் தான் அழகாக இருக்கீங்கனு சொன்னார். அவர் உடல்நலம் சரியில்லாம இருப்பதை பார்த்து இந்தியாவே கவலைப்படுது. என் ஆயுளையும் சேர்த்து அவருக்கு கொடு என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அவர் நல்லபடியாக குணமடைந்து மீண்டும் வந்து பாடணும், ரொம்ப வருஷம் பாடணும் என உருக்கமாக பேசியுள்ளார்.