பொதுவாகவே, நடிகைகள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிலர் ஷூட்டிங் இல்லாத நேரத்திலும் மேக்கப்புடன் தான் இருப்பார்கள். 

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக நடிகைகள் மேக்கப்பையும் தாண்டி, தங்களின் அழகை மெருகேற்றும் வகையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.  தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகை சமந்தா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் பிளாஸ்டிக் சர்ஜெரி சிகிச்சை மூலம் தங்களுடைய அழகை மெருகிற்றியுள்ளனர்.

அதிலும் பாலிவுட் திரையுலகை, சேர்ந்த நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும்! அந்த வகையில் பிரபல நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  பிரபலமும்மான, நடிகை சாரா கான், உதட்டை பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

தற்போது முதல்முறையாக அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட,  இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் இவரை விமர்சித்து வருகின்றனர்.  ஒரு சிலர் நல்லவிதமாக அழகாய் இருந்த உதடுகளை இப்படி மாற்றிக்கொண்டது ஏன் என்பது போல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.