தமிழ் மற்றும் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுத்து இன்று நாயகியாக நடித்து வருபவர் நடிகை சனுஷா.
இவர் திரிஷா விக்ரம் நடித்த பீமா படத்தில் திரிஷாவுக்கு தங்கையாக நடித்திருப்பார், மேலும் ரேணி குண்டா, எத்தன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கார் விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அதேபோல் விபத்து ஏற்பட்ட ஒரு கார் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை பார்த்த சனுஷா இத்தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார். அதோடு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சனுஷா இன்று மாலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாட இருப்பதாக கூறப்படுகிறது.
