கோலிவுட்டில் குத்து பாட்டிற்கு ஆட்டம் போடுவதற்காகவே சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி கன்னிகளை பட்டியலிட்டு வைத்திருந்தது எல்லாம் ஒரு காலம். இப்போது நடிகைகளே போதும், போதும் என்ற அளவிற்கு படம் முழுக்க கவர்ச்சியை அள்ளி வீசுகிறார்கள். போதாக்குறைக்கு பாடல் காட்சிகளில் கவர்ச்சி உடையில் தோன்றி, ரசிகர்களை திணறடித்துவிடுகிறார். அதனால் குத்து பாட்டிற்கு என்று பிரத்யேக நடிகைகள் எல்லாம் இப்போது தேவைப்படுவது இல்லை. அதுமட்டுமில்லாமல் படுக்கையறை காட்சியில் இருந்து முத்தக்காட்சி வரை அனைத்திலும் தாராளமாக ஹீரோவுடன் இணைந்து நடிக்கிறார்கள். 

 

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டுச் சென்ற சிரஞ்சீவி சார்ஜா...குழந்தையின் முகத்தை பார்க்காமலேயே மரணித்த சோகம்...!

படத்தில் தான் இப்படி தான் என்றால், சோசியல் மீடியா பக்கம் அதை விட கொளுந்துவிட்டு எரிகிறது. படவாய்ப்பிற்காக அரைகுறை ஆடையில் கவர்ச்சி போட்டோஸையும், துள்ளல் நடனத்துடன் டிக்-டாக் வீடியோக்களையும் நடிகைகள் பகிர்ந்து வருகின்றனர். இப்போதைய ட்ரெண்டிங்கே கவர்ச்சி தான் என்பதால் நடிகைகளும் அதை கையில் எடுத்துவிட்டனர். அப்படி சோசியல் மீடியாவில் கவர்ச்சி புயலாக வலம் வரும் நடிகை சஞ்சனா சிங் வெளியிட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க:  யுவனை மதம் மாற்றினேனா?... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...!

ரேனிகுண்டா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அதன் பின்னர் ரகளபுரம், அஞ்சான், தனியொருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் பிரபல தொலைக்காட்சிகள் நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றிலும் கலந்து கொண்டார். பட வாய்ப்புகளை பெறுவதற்காக ஹாட் பிகினி முதல் கண்கூசும் வரையிலான கவர்ச்சி உடைகளை பலவற்றையும் அணிந்துள்ள போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கும் சஞ்சனா சிங், அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: கதறி அழும் கீர்த்தி சுரேஷ்...கோடாரியால் வெட்டித் தள்ளும் கொலைகாரன்...வெளியானது மிரட்டலான “பெண்குயின் டீசர்!

சமீபத்தில் சஞ்சனாவும் டான்ஸ் மாஸ்டர் ராதிகாவும் நடுரோட்டில் முருகன் பாட்டிற்கு போட்ட குத்தாட்டம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மங்களகரமான மஞ்சள் நிற புடவையில் சாமி பாட்டிற்கு மோசமாக நடனமாடியது ஒருபுறம் லைக்குகளை குவித்தாலும், மறுபுறம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படியா சாமி பாட்டிற்கு நடுரோட்டில் குத்தாட்டம் போடுவீர்கள் என நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு விளாச ஆரம்பித்துவிட்டனர். இதோ அந்த வீடியோ...