தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சமந்தா, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: என்னாது நிர்வாண யோகாவா?.... ஊரடங்கில் எல்லை மீறி ஆட்டம் போடும் இளம் நடிகை...!

விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். இடையில் சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் இனி படங்களில் நடிக்கமாட்டார் என்றும் தகவல்கள் பரவியது. சமீபத்தில் நடந்த நடிகர் ராணாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இதையும் படிங்க: பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

ஒருபக்கம் சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கட்டி உருண்டு வருகின்றனர். சமந்தா ஒன்று அழகில்லை என பூஜா ஹெக்டே இன்ஸ்டாவில் பதிவு செய்ய, அவரை சம்மு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர். இதனிடையே சத்தமே இல்லாமல் சமந்தா செய்த சாதனை ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லாக்டவுன் நான் கண்டுபிடிச்சதை பாருங்கள் என சமந்தா தனது 10வது மார்க் ஷீட்டை பதிவிட, அது சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. காரணம் சம்மு படிப்பில் அவ்வளவு புத்திசாலியாக இருந்திருக்கிறார். ஆம்... கணக்கில் 100/100, மற்ற பாடங்களில் 90க்கு  மேல் மதிப்பெண் வாங்கியுள்ள சமந்தாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.