தமிழில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற '96 ' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில், நடிகை சமந்தா, திரிஷா வேடத்தில் நடித்திருந்தார். விஜய்சேதுபதி நடித்த வேடத்தில் தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தில் அனன்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்த சர்வானத் நடித்திருத்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி வெளியான இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து, சமந்தா இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்தினார்.

இதையும் படிங்க: படுக்கையறையில் ஓவர் நெருக்கம்...போட்டோ வெளியிட்டு மிரட்டும் காதலன்...சீரியல் நடிகையின் கள்ளக்காதல் பஞ்சாயத்து!

த்ரிஷா அளவிற்கு சமந்தா நடிப்பு இருந்ததா என தமிழ் ரசிகர்கள் பூதக் கண்ணாடியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில், தெலுங்கு ரசிகர்களோ படத்தை ஆகா... ஓஹோ... என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்த படம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் பங்கேற்கும் சமந்தா, தனது குடும்ப வாழ்க்கை குறித்த கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். 

இதையும் படிங்க: கடற்கரையில்... டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு... ரசிகர்களை வெறியேற்றிய "நாகினி"...!

பேட்டி ஒன்றில், குடும்ப வாழ்க்கையையும், சினிமாவையும் எப்படி பேலன்ஸ் செய்கிறீர்கள்? என சமந்தாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் பெரும்பாலும் மாலை 6 மணிக்கு மேல் ஷூட்டிங்கில் பங்கேற்கமாட்டேன். வீட்டிற்கு வந்ததும் அனைத்து நேரத்தையும் நாக சைதன்யாவிற்காக மட்டுமே செலவிடுவேன்.  எப்படிப்பட்ட படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே வீட்டு வாசலில் வைத்துவிட்டு தான் செல்வேன். அப்படி நான் செய்யவில்லை என்றால் நாகசைதன்யா என்னை கொன்றேவிடுவார் என வழக்கமான க்யூட் ஸ்மைலுடன் பதிலளித்துள்ளார்.