நாக சைதன்யாவுக்கு நான் முதல் மனைவி என்று சொல்ல முடியாது  ஏனென்றால் எப்போதும் அவர் தலையணையை அணைத்தபடி தான் படுத்திருப்பார் தூங்கும்போதும் அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தான் தூங்குவார் என சமந்தா தெரிவித்துள்ளார். மாத இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்  தன்னுடைய இல்லற வாழ்க்கை குறித்த அவர் இவ்வாறு பகிரங்கமாக கூறியுள்ளார். 

தன்னுடைய நடிப்பாலும் நடனத்தாலும் தமிழ் ரசிகர்களை மட்டுமல்ல தென்னிந்திய ரசிகர்களையே கட்டிப்போட்டு வைத்திருந்தவர் நடிகை சமந்தா.  ஒருகட்டத்தில் நயன்தாராவையே பின்னுக்குத்தள்ளி தனக்கென திரையுலகில் தனியிடத்தை உருவாக்கியவர் சமந்தா.  இவர்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தெலுங்கு நடிகர்  நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இத்தனைநாட்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவந்த சமந்தா. தற்போது  தன் இல்லற வாழ்க்கைகுறித்து வாய்திறந்துள்ளார். அதாவது,  திருமணம் என்பதே தனக்கு நிறைய அமைதியை பாதுகாப்பை சமாதானத்தை கொடுத்திருக்கிறது என்றும்  திருமணம் தனக்கு வலிமையை தந்துள்ளது. தற்போது குடும்பம் தருவது போன்ற ஆதரவுக்காக தான் எப்போதும் எங்கி இருப்பதாக  தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கூறியுள்ள அவர்,  திருமணம் ஆனதிலிருந்து குழந்தை எப்போது என்று என்னை சந்திப்பவர்கள் கேட்டு வருகின்றனர்,  ஆனால் குழந்தையை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும்  என்பதை முடிவு செய்யும் உரிமை எனக்கே உள்ளது.

 

குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து வைத்துள்ளேன்.  அதை இப்போது சொல்ல முடியாது இதற்குமேல் தகவல் வேண்டுமென்றால் நாக சைதன்யா விடும் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.  சினிமாவை விட எனது கணவருக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்.  குழந்தை குறித்து இப்போது நாங்கள் யோசிக்கவில்லை அதேநேரத்தில் என்று கூறியுள்ள அவர்,  நாகசைதன்யாவிற்கு  நான் முதல் மனைவி என்று சொல்ல முடியாது, ஏன் என்றால் எப்போதும் அவர் தலையணையைதான் அணைத்தபடி படுத்திருப்பார், தூங்கும் போதும்,  அதை கட்டிபிடித்துக் கொண்டு தான் இருப்பார்.  எப்போதும் எங்களுக்கு இடையில் ஒரு தலையணை இருக்கும்.  அவரை முத்தமிட வேண்டும் என்றால் கூட தலையணையை கேட்க வேண்டிதான் இருக்கும் . எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன திருமணத்திற்கு முந்தைய  அன்பிற்க்கும்,  பிந்தைய அன்பிற்க்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.