தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. 2010 'பானா காத்தாடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ,  அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், இரும்புத்திரை, யூ டர்ன்,  உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

லைம் லைட்டில் இருக்கும் போதே, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து 2017 திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் இவர் நடிக்க மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில், சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் கமிட்டாகி தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டை,  கணவர் நாக சைதன்யாவுடன், வெளிநாட்டில் கொண்டாடிய புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டார்.

இவர் வெளியிட்ட புகைப்படத்தை, பார்த்த ரசிகர்கள் பலர் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.  காரணம் அதற்கு ஏற்றாற்ப்போல் இவரும் ஒரு சில வார்த்தை கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா எந்த பதிலும் கூறாமல் மவுனம் சாதித்து வருவதால், தெலுங்கு பட உலகினர் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக கிசுகிசுத்து வருகின்றனர்.  சமந்தா, தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.  2 தெலுங்கு படத்திலும் கமிட்டாகியுள்ளார் அதில் ஒரு படத்தில் கணவர் நாகசைதன்யாவிற்கு  ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது