தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தெலுங்கின் முன்னணி நடிகரின் நாகார்ஜுனாவின் மகனும், பிரபல நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது சமூக பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் சமந்தா கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சமந்தா, அவர்களது கேள்விக்கு தொடர்ந்து ஆங்கிலத்தில் பதிலளித்து வந்தார். திடீரென சமந்தாவின் பேச்சில் குறுக்கிட்ட பத்திரிகையாளர் ஒருவர், இந்தியில் பதிலளிக்கும் படி கூறினார். இதற்கு தனக்கு இந்தி நன்றாக தெரியும் என்று பதிலளித்தார். மேலும் நான் South Indian என்பதால், உச்சரிப்பு சரியாக வராது. எனவே இந்தியில் பதிலளிக்க முடியாது என கூறினார். அதன் பின்னரும் தொடர்ந்து ஆங்கிலத்தில் மட்டுமே சமந்தா பேசினார். 

சில நாட்களுக்கு முன்பு கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற தாப்ஸி, அங்கு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் பேசி வந்தார். அப்போது இடைமறித்த பத்திரிகையாளர் ஒருவர், "நீங்கள் பாலிவுட் நடிகை அதனால் இந்தியில் பேசுங்கள்" என கட்டாயப்படுத்தினார். இதனால் கடுப்பான தாப்ஸி, "நான் தமிழிலும் நடிக்கிறேன், அதனால் தமிழிலில் பேசட்டுமா" என அதிரடியாக கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.