இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக நடிகர் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகியோர் இணைந்து நடித்த பவர் ஃபுல் ஆக்ஷன் படமாக இயக்கப்பட்ட 'ஆக்ஷன்' திரைப்படம் வெளியானது.

படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பி இருந்ததால், இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இதைதொடர்ந்து அடுத்ததாக சுந்தர்.சி வழக்கம் போல ஹாரர் கதைக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... தற்போது அரண்மனை சீஸிஸ் 3 படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

முதல் பாகத்தில், நடிகை ஹன்சிகா, வினய், சுந்தர்.சி, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். அரண்மனை 2 ஆம் பாகத்தில் நடிகர் சித்தார்த், திரிஷா, ஹன்ஷிகா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மூன்றாவது பாகத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், ராஷி கண்ணா மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது நாயகியாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வால் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.