பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி, கடந்த 2 நாட்களுக்கு முன் கோலாகலமாக துவங்கியது. முதல் நாளான நேற்று பெரிதாக எந்த பிரச்சனையும் பிரபலங்களுக்குள் வரவில்லை,  ஆனால் தற்போது இரண்டாவது நாளான இன்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் சாப்பாட்டிற்காக  பிரச்சனை வந்துள்ளது.

இந்தப் பிரச்சினையை துவங்கியுள்ளார், பிரபல மாடலும் நடிகையுமான சாக்ஷி அகர்வால்.  தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... "சாக்ஷி அகர்வால் நான் எப்போதுமே பொங்கல் சாப்பிடவே மாட்டேன், முதல் முறையா சாப்பிட்டு விட்டேன். ஆன திரும்பவும், இதே பொங்கலை  சாப்பிடணும்னா கண்டிப்பாக முடியாது என கூறுகிறார்.

இதற்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்தை கூற முயல்கின்றனர். பின், வனிதா விஜயகுமார்,  உங்களுக்கு பொங்கல் பிடிக்காதா... இல்லை பொங்கல் ஒத்துக்காதா என கேட்கிறார்.  இதற்கு சாக்ஷி அகர்வால் இரண்டுமே இல்லை என கூறி தன்னுடைய கருத்தை கூறுகிறார்.

பின் இது குறித்து ஏதோ, அங்கு பிரச்சனை வரவே பாத்ரூம் கிளீன் செய்து கொண்டிருக்கும், தர்ஷனிடம் நான் பேசியது தவறா என சாக்ஷி கேட்க, இல்லை என சாக்ஷிக்கு ஆதரவாக பதில் கூறுகிறார் தர்ஷன். இன்னும் வர வர என்ன பிரச்சனை வெடிக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.