முகத்துக்குப் போடும் கிரீம் விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒரே ஒரு நாளுக்கு 2 கோடி ரூபாய் வழங்க அந்நிறுவனம் வழங்க முன்வந்த நிலையில் பணத்துக்காக தனக்கு உடன்பாடு இல்லாத விளம்பரங்களில் நடிக்க விருப்பமில்லை என்று மறுத்திருக்கிறார் ஒரிஜினல் பேரழகி சாய்பல்லவி.

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சாய் பல்லவியை அழகு சாதன நிறுவனம் ஒன்று அணுகி தங்களது விளம்பரத்தில் நடிக்க கேட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக அதற்கு 2 கோடி சம்பளமும் பேசியுள்ளனர். ஆனால், அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

”என் தங்கைக்கு அவளை விட நான் சிவப்பாக  இருக்கிறேன் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை எப்போதுமே இருந்தது. அதனால் நான் அவளிடம் ‘நீ சிவப்பாக  மாற வேண்டும் என்றால் காய் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று சொன்னேன்’ ஆனால், உண்மையில் அவளுக்கு அவற்றை சாப்பிடுவது பிடிக்காது. அவர் சதா சர்வகாலமும் பர்கர்,பிட்சாக்கள் சாப்பிடுகிற ரகம்.

இருப்பினும் சிவப்பாக மாற வேண்டும் என்பதற்காக அவர் காய் மற்றும் பழங்களை சாப்பிடத் துவங்கினாள். அப்போது தான் நான் உணர்தேன் சிவப்பாக ஆக வேண்டும் என்பதற்காக அவள் தனக்கு பிடிக்காததை கூட செய்தால். அப்படி இருக்க நானே கிரீம் தடவினால் சிவப்பாகஆகலாம் என்று மக்களிடம் பொய் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிக்க முடியுமா? 

அப்படிப் பொய்யான ஒரு செய்தியைப் பரப்பும் விளம்பரம் மூலம் வரும் பணத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்.அந்த பணத்தை வைத்து நான் அதே சாப்பாட்டை தான் சாப்பிட போகிறேன். நம்மை சுற்றியுள்ளவர்களை நாமே ஏமாற்ற கூடாது. நமக்கு இயற்கையாக அமைந்திருக்கிற நிறம் இந்திய நிறம் என்ற பெருமையோடு இருந்துகொள்ளவேண்டியதுதான். ஆப்பிரிக்க நாட்டினர் கருப்பாக இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் அழகாக இல்லை என்று சொல்லிவிட முடியுமா? என்று உலகத்தரத்துக்கு அழகுக்குறிப்பு வகுப்பு எடுக்கிறார் சாய் பல்லவி.