இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் சுயசரிதைப் படமான ‘தலைவி’யில் சசிகலா வேடத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்கிறார் ரவுடி பேபி சாய் பல்லவி. அப்படி ஒரு அழைப்பு வந்தால் அந்தப் பாத்திரத்தின் தன்மை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார்.

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின் ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து சாய்பல்லவி நடித்திருக்கும் ‘அதிரன்’ ரிலீஸ் உற்சாகத்தில் இருந்த சாய்பல்லவி, இதுவரை தன்னையும் இயக்குநர் விஜயையும் இணைத்து வெளிவந்த கிசுகிசுக்கள் குறித்து வாயே திறக்கவில்லை. ஆனால் அவருடன் தொடர்பு எல்லையில்தான் இருக்கிறார் என்பது இக்கேள்விக்கு அவர் அளித்திருக்கும் பதிலிலிருந்து தெரிகிறது.

“ சசிகலா கேரக்டரில் நடிக்க விஜய் சார் என்னை அணுகியதாக இணையதளங்களில்தான் படித்தேன். ஆனால் அச்செய்திகளில் உண்மை இல்லை. சசிகலா கேரக்டரில் நடிக்கப் பொருத்தமான ஒரு தோற்றம் என்னிடம் இருப்பதாக நான் கண்டிப்பாகக் கருதவில்லை. அதையும் மீறி அவர் என்னை கன்வின்ஸ் செய்தால் ஒருவேளை நான் நடிக்கக் கூடும் என்கிறார்.

விஜயின் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க  இந்தி நடிகை கங்கனா ரணாவத் கமிட் செய்யப்பட்டிருப்பதும் அவருக்கு சம்பளமாக 24 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.