சினிமாவில் ஒரு பெண் வெற்றியடைய வேண்டுமானால் கவர்ச்சியாக நடித்தால் தான் வெற்றியடைய முடியும் என்ற சூத்திரத்தை உடைத்து தங்களுக்கென ஒரு பாணியை வகுத்தவர்கள் பலர்

சினிமாவில் ஒரு பெண் வெற்றியடைய வேண்டுமானால் கவர்ச்சியாக நடித்தால் தான் வெற்றியடைய முடியும் என்ற சூத்திரத்தை உடைத்து தங்களுக்கென ஒரு பாணியை வகுத்தவர்கள் பலர். அதில் முற்றிலும் வேறுபட்டவர் சாய் தன்ஷிகா. 'பேராண்மை' படத்தின் மூலம் தன்னை அதிரடி நாயகியாக நிலைநிறுத்திக் கொண்டதோடு, படத்திற்கு படம் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் அவர் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தினத்திற்காக கூறியதாவது:

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணமும் சந்தோஷமாக இருப்பதற்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான் காரணம் என்பதை இந்த சுதந்திர தினத்தன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல தியாகங்களைச் செய்து அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.அடுத்த தலைமுறைக்காக நமது நாட்டை நல்ல முறையில் கொடுக்க வேண்டும்.

 நம்மை சுற்றியிருக்கும் மக்களுக்கும், சமுதாயத்திற்கும் உங்களால் இயன்ற அளவு செயலாற்றுங்கள். நம்முடைய சிறு பங்களிப்பும் நம்முடையச் சுற்று வட்டாரத்தின் மாற்றத்திற்கு பெரிதும் உதவும். இதுவே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமையும்.

இவ்வாறு சுதந்திர தினத்திற்காக அதிரடி நாயகி சாய் தன்ஷிகா கூறினார்.