நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான 'ஜெயம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சதா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதுடன் இந்த படத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நடிகை சதாவிற்கும் திருப்பு முனையாக அமைந்தது. 

முன்னணி நடிகருக்கு ஜோடியாக சதா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விக்ரம், மாதவன் உள்ளிட்ட நடிகர்கள் படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமான சதா, தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்தார். 

படவாய்ப்பு இல்லை:

இந்நிலையில், இவருக்கு கடந்த சில வருடங்களாக சரியாக பட வாய்புகள் இல்லை, அதன் காரணமாக தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

டார்ச் லைட்:

சதா நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக நடித்து வரும் திரைப்படம் 'டார்ச் லைட்'. இந்தப் படத்தை இயக்குநர் மஜீத் இயக்கி வருகிறார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. பெண்களுக்கான  விழிப்புணர்வுப்  படமாக 'டார்ச் லைட்' படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் தொழிலை கையில் எடுக்கும் சதா:

இந்நிலையில் இயக்குனர் மஜீத் இயக்க இருக்கும் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார் நடிகை சதா. இயக்குனர் மஜீத் ஏற்கனவே நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிப்பெற்ற 'தமிழன் 'படத்தை இயக்கியவர். 

இவர் தற்போது சதாவை வைத்து இயக்கிய படம் குறித்து இயக்குனர் மஜீத் பேசுகையில்... இப்படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது என்றும் பல நடிகைகள் நடிக்க தயங்கிய இந்த கதையில் தைரியமாக நடிக்க சம்மதித்தவர் சதா என்றும் தன்னுடைய இயக்கத்தில் மேல் உள்ள நம்பிக்கையால் தான் எழுதி வைத்திருக்கும் அடுத்த கதையை அவரே தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் இயக்குனர் மஜீத்.