புத்தகக் கண்காட்சியில் பிக்பாக்கெட் அடித்த நடிகை கைது - 30 பேரின் பர்சுகளை அபேஸ் செய்தது அம்பலம்

Rupa Dutta : எந்தெந்த இடங்களில் எவ்வளவு ரூபாய் திருடினோம் என்பதை குறித்து வைத்துக்கொள்ள நடிகை ரூபா தத்தா, டைரி ஒன்றை பயன்படுத்தி வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Actress Rupa Dutta arrested for theft at Kolkata book fair

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்தப் புத்தக கண்காட்சிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் ஏராளமான பொதுமக்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்தனர். அப்போது அங்கிருந்த சிலர் தங்களின் பர்சுகளைக் காணவில்லை என புகார் அளித்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக உடனே அங்கிருந்த போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்து சோதனை நடத்திய போலீசார், சுமார் 30-க்கும் மேற்பட்டோரின் பர்சுகள் காணாமல் போயிருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து புத்தகக் கண்காட்சி நடந்த மைதானத்தின் பிரதான நுழைவு வாயிலை மூடிய போலீசார், அங்கு வந்திருந்த அனைவரது உடமைகளையும் பரிசோதனை செய்தனர்.

Actress Rupa Dutta arrested for theft at Kolkata book fair

அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்ட நடிகை ரூபா தத்தா, திடீரென்று குப்பைத்தொட்டியில் எதையோ போட்டு மறைத்துக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே குப்பைக்கூடையை பரிசோதனை செய்தபோது, அதில் ஏராளமான பர்சுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து நடிகை ரூபா தத்தா வைத்திருந்த பையையும் வாங்கி போலீசார் சோதனை செய்ததில், அதில் 10க்கும் மேற்பட்ட பர்சுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வசமாக சிக்கிக்கொண்ட ரூபா தத்தாவிடம் இருந்து 75,000 ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. பிறகு அந்தத்தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Actress Rupa Dutta arrested for theft at Kolkata book fair

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், நடிகை ரூபா தத்தா இதுபோன்ற திருட்டுகளை பல்வேறு இடங்களில் பல மாதங்களாக செய்து வந்ததை கண்டுபிடித்தனர். எந்தெந்த இடங்களில் எவ்வளவு ரூபாய் திருடினோம் என்பதை குறித்து வைத்துக்கொள்ள அவர் டைரி ஒன்றை பயன்படுத்தி வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. புத்தகக் கண்காட்சியில் நடிகை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார், இன்று கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்... பட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சிக்கு தாவிய பிரியா பவானி சங்கர்! அரைகுறை ஆடையில் அதகளப்படுத்தும் ஹாட் போட்டோஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios