தமிழில் 1987 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கூலிக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரூபிணி. இந்த படத்தை தொடந்து, இந்த படத்தை தொடர்ந்து ராஜா சின்ன ரோஜா, அபூர்வ சகோதரர்கள் என 80 களில் முன்னணி நடிகர்களாக இருந்த பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

குறிப்பாக, இவர் உலகநாயகன் கமல்ஹாசன்தான் நடித்த மைக்கில் மதன காமராஜன் படத்தில், சிவ ராத்திரி என்கிற ரொமான்டிக் பாடலுக்கு, மனோரமா டாஸ் சொல்லி தர, ரூபிணி நடமாடுவார். தற்போது வரை இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் எனலாம்.

தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களிலும் ரூபிணி நடித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு மோகன் குமார் ராயணா, என்பவரை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். பின் கருத்து வேறுபாடு காரணமாக இவர், 2005 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விலகினார்.

தற்போது இவருக்கு அனிஷா என்கிற ஒரு மகள் உள்ளார். மேலும் ஸ்பெஷல் சில்ரனுக்காக அமைப்பு ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.

திரைப்படங்களில் நடிக்கும் போது, அழகு தேவதை போல், மின்னிய இவர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? அவரா இவர் என ரசிகர்களே அதிர்ச்சியடையும் அளவிற்கு இருக்கிறார்.