கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மெல்ல மெல்ல பரவி வருகிறது. இதன் தீவிரத்தை அறிந்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், இதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் சிலர் ஊர் சுற்றி வருகிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலில் கொரோனாவின் தீவிரம் பற்றி அறியாமல், இருந்ததால் தான் பல்வேறு பொருளாதார இழப்புகளையும், உயிர் இழப்புகளையும் மேற்கொண்டதாக, சீனா மற்றும் இத்தாலி போன்ற உலக நாடுகள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து வருவதையும் அதிகம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஏ.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான ஆர்.கே செல்வமணி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து தன்னுடைய வீட்டில், பண்டிதர்கள் மூலம் 'ருத்ராபிஷேகம்' என்ற யாகத்தினை நடத்தியுள்ளனர்.

கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுக்கமக்களை காத்திட வேண்டும் என்பதற்காக இந்த யாகத்தை தன்னுடைய வீட்டில் நடத்தியுள்ளதாக ரோஜா தெரிவித்துள்ளார்.