கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகம், புதுச்சேரி, மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் நிதி உதவி அளித்துள்ளனர். மேலும் கோலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர்களும் தங்களால் முடிந்த நிதி கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை கமல் 25 லட்சமும், சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் கொடுத்துள்ளனர். 

இவர்களை தொடர்ந்து நடிகை ரோஹிணி 2 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார்.

கேரளாவில் 50 ஆண்டுகளுக்கு பின் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் மண் சரிவினால் கேரள மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.