நடிகை ரோகிணி பிரபல மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு,  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். "நரேந்திர மோடியிடம் சொல்வதற்கு தன்னிடம் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள் என்பது தான் என கூறினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் இப்படி ஒரு ஆட்சி நாட்டுக்கு தேவை இல்லை. 5 ஆண்டுகளாக இந்துத்துவாவை அதிகமாக பார்த்து விட்டோம். நீங்கள் மீண்டும் நாட்டுக்கு தலைவராவதை நாங்கள் விரும்பவில்லை " என்று கூறினார்.

இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா கட்சியினர் ரோகிணியை வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். அவரது சொல் போன் நம்பரையும் வெளியிட்டுள்ளனர். ரோகிணிக்கு ஆதரவாகவும் வலைதளத்தில் சிலர் பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…

இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் நடிகை ரோகிணி , "மோடிக்கு எதிராக எனது கருத்தை, கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், எனது எண்ணை பகிந்து தகாத விதமாக பேசுபவர்களின் பண்பு என்னவென்பது தெரிகிறது. வசவு சொற்கள் எல்லாமே பெண்ணையே மையப்படுத்தி இருப்பதையும் கவனிக்க வைக்கிறார்கள் என்று அலறி அடித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.