இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான, 'பரதேசி' படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரித்விகா. ஆனால் இவருக்கு சிறந்த அறிமுகம் கொடுத்தது என்றால், நடிகர் கார்த்தியை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய, 'மெட்ராஸ்' படம் தான். இந்த படத்தில் கலையரசனுக்கு மனைவியாக நடித்திருந்தார். இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

இதை தொடர்ந்து, ஒரு நாள் கூத்து, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி டைட்டில் வின்னராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான, 'கடைசி குண்டு' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. மேலும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதிலும் பிஸியாக இருக்கிறார்.

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார் ரித்விகா. மேலும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு "எதுவும் மாறவில்லை என்றால், எதுவும் மாறாது. நமது மனநிலை மாறும்போது எல்லாம் மாறலாம்" என கூறி இருந்தார். பிரபலங்கள் எது போட்டாலும் கலாய்க்கும் சிலர் இவரின் இந்த பதிவையும் கலாய்த்தனர்.

அந்த வகையில் ரித்விகா போட்ட புதிய போட்டோ மற்றும் பதிவை கண்டு, ஒருவர் "ஐயோ பாவம் பட வாய்ப்பு இல்லாமல் வெட்டியா இருக்கீங்கபோல என கேட்க" ரித்விகா மிகவும் கோபமாக மாறி... மூடிக்கிட்டு போடா என நாடு விரலை கட்டிய படி உள்ள எமோஜியை பதிவிட்டுள்ளார். 

என்ன தான் இருந்தாலும், இந்த ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு இவ்வளவு கோபப்பட வேண்டியது இல்லை என்பதே சிலரது கருத்தாகவும் உள்ளது. பிக்பாஸ் வீட்டில், நல்ல புள்ள மாதிரி இருந்த இவரின் உண்மையான குணம் இதுவா? ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது பாஸ்!