திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுக்கும்போதெல்லாம், பல முறை பலவந்தமாக இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததால் தான் திரையுலகை விட்டு முழுமையாக விலகியதாக கூறியுள்ளார் முன்னணி நடிகை ரிச்சா.

சமீப காலமாக நடிகைகள் பலர்,  படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான்  திரையுலகில் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கப்படுவதாக கூறி வருகிறார்கள். இதுபோல் ஏற்கனவே, ஹாலிவுட், கோலிவுட், டோலிவுட், பாலிவுட், திரையுலக நடிகைகள் புகார் கூறி வருகிறார்கள். தற்போது பிரபல நடிகை ரிச்சா முதல் முறையாக இதுபோன்று ஒரு தகவலை கூறியுள்ளார். 

கடந்த 2002 ஆம் ஆண்டு, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்தவர் நடிகை ரிச்சா. ஸ்லிம் பிட்டாக இருக்கும் நடிகைகள் மத்தியில், அமுல் பேபி போல் தோன்றுபவர் ரிச்சா. இதன் காரணமாகவே இவருக்கு பல ரசிகர்கள் இருந்தனர்.

இவர் நடித்த படங்கள் தொடந்து வெற்றி பெற்ற நிலையிலும், திடீர் என திரையுலகை விட்டு ஒதுங்கினார். பின்னர் இவரை அதிகபட்சமாக திரைப்படங்களில் காண முடியவில்லை. இது குறித்து தற்போது முதல் முறையாக கூறியுள்ளார்.

திரையுலகத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு அணுகியபோதெல்லாம், தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள், இதனால் திரைப்படங்கள் நடிப்பதில் இருந்து விலகினேன்... திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நடிக்க வாய்ப்பு கேட்ட போதும், சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பல முறை பலவந்தமாக தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள். இதனால் திரையுலகை விட்டு முழுமையாக விலக முடிவு செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் பெயர்களை கூற விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இவர் இப்படி ஒரு தகவலை கூறியுள்ளது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.