சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டில்  வசித்து வந்ததவர் திரைப்பட நடிகை ரியாமிகா. இவர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

ஆனால் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு  சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்ட ரியாமிகா நேற்று  சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை ரியாமிகாவும்  அவரது தம்பி பிரகாஷ் என்பவரும் வளசரவாக்கத்தில் கடந்த 4 மாதங்களாக குடியிருந்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை வெளியே சென்று விட்டு காலை 11.30 மணிக்கு வீட்டிற்கு வந்தவர் தனது அறைக்கு சென்று தூங்கியுள்ளார்.

இதையடுத்து நேற்று  மாலை  காதலர் தினேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பார்த்த போது  தனது படுக்கையறையில் உள்ள பேனில் சேலையால் தூக்கிட்டு கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ரியாமிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்தவமனைக்க கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.