அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில் நடிக்க தனது மகளுக்கு அழைப்பு வந்ததாகவும், அந்த வாய்ப்பை சற்றும் யோசிக்காமல் நிராகரித்துவிட்டதாகவும் நடிகை தேவதர்ஷினி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

திவ்யதர்ஷினி- சேத்தன் தம்பதியின் மகள் நியதி சமீபத்தில் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘96 படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அதையொட்டி அவருக்கு பாராட்டுகளும் பட வாய்ப்புகளும் குவிந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தன் மகளின் படிப்பு காரணமாக நிராகரித்த திவ்யதர்ஷினி ‘தளபதி 63’ பட வாய்ப்பையும் கூட நிராகரித்துள்ளார்.

இத்தகவலை இவ்வளவு நாளும் ரகசியமாய் வைத்திருந்த திவ்யதர்ஷினி பேசுகையில்,’அக்டோபர் மாதம் `96’ ரிலீஸ் ஆன நேரத்தில் என் மகளை ’தளபதி 63’ படத்தில் நடிக்க முடியுமா என்று அட்லீ கேட்டார். `இப்போதான் ’96 படம் நடிச்சி முடிச்சிருக்காங்க. மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு வருது. அதுக்கு அவங்க தயாராகணும்‘னு சொன்னேன். அதைப் புரிஞ்சுக்கிட்டார்.

கண்டிப்பாக எந்த ஒரு ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும், தளபதிகூட நடிக்க ஆவலாகத்தான் இருப்பாங்க. என் மகளுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. பட வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும், இப்போது அவளுக்குப் படிப்பு ரொம்ப முக்கியம். அதனால்தான் இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னேன். பிறகு கொஞ்ச நாள் கழித்து, `விஜய்க்கு அக்கா கேரக்டரில் நீங்க நடிக்க முடியுமான்னு கேட்டாங்க. ஓ.கே சொன்னேன். என்னுடைய ஷெட்யூல் பிப்ரவரி மாசமே முடிஞ்சிடுச்சு. ஐந்து நாட்கள் நடிச்சு முடிச்சிட்டேன். என்னுடையது முக்கியமான கேரக்டராக இருக்கும்’என்கிறார்.