கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர், ரெஜினா கேசன்ட்ரா.

தற்போது , செல்வராகவன் இயக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை', உதயநிதியுடன் 'சரவணன் இருக்க பயமேன்', அதர்வாவுடன் ' ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

 அது மட்டும் இல்லாமல் தெலுங்கில் முன்னனி நாயகியாக வளம் வரும் இவருக்கு நிச்சயதார்த்தம் நடை பெற்றதாக சொல்ல படுகிறது.

அதற்கு காரணம் , நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும், இந்த விஷயத்தை தன்னால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார்.

அதே போல் நிச்சயதார்த்தம் நடந்தேரியது போல ஒரு ஆண் பெண் கையையும் இணைத்த புகை படத்தையும் பதிவிட்டிருந்தார். மேலும் ரெஜினா ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்க பட்டது.

தற்போது இந்த பதிவை போட்ட 10 நியமிடத்தில் அகற்றியும் விட்டார். இது படத்தின் ப்ரோமோஷான்காக இப்படி செய்தாரா இல்லை உண்மையா என குழம்பியுள்ளனர் திரையுலகினர்.