அடுத்த வாரம், பிப்ரவரி 21 ஆம் தேதி தெலுங்கில் நடிகர் நிதின் மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள பீஷ்மா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக கலந்து கொண்டு வருகிறார்கள் இந்த படத்தின் ஹீரோ நிதின் மற்றும் ஹீரோயின் ராஷ்மிகா.

அதன்படி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட, நடிகர் நிதினிடம் தொகுப்பாளர் மிகவும் ஜாலியாக, ரஷ்மிகா பற்றி யாருக்கும் தெரியாத ரகசியத்தை கூற வேண்டும் என கேட்டார்.

ரஷ்மிக்காவிற்கு விசித்திரமான உணவுப் பழக்கம் உள்ளதாக கூறினார்  நிதின். “ சாதாரண மக்கள் மாலை வேளையில் ஸ்னாக்ஸ்சாக ரொட்டி, தோசை, இனிப்புகள் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள். ஆனால், ரஷ்மிகா நாய் பிஸ்கட்டை சாப்பிடுவார் என கூறினார்”.

மேலும் செய்திகள்: யார் இந்த ஹீரோ..? குழந்தை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு டெஸ்ட் வைத்த காமெடி நடிகர் சதீஷ்!
 

நிதினுக்கு அருகே அமர்ந்திருந்த ரஷ்மிகாவுக்கு இது பெரும் சங்கடமாக போனது. உடனே ராஷ்மிகா கடுப்பானாலும் அதனை பெரிதாக வெளியில் கட்டி கொள்ளாமல் சிரித்தவாரே... ஒரு முறை... நாய் பிஸ்கட் என்று தெரியாமல் சாப்பிட்டு விட்டதாக கூறினார். 

நடிகை ராஷ்மிகா தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'சுல்தான்' என்கிற படத்தில் நடித்துள்ளார். மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.