புது மாப்பிள்ளை சதீஷ், திருமணம் முடிந்த கையோடு படப்பிடிப்பில் பிஸியாகி விட்டார். அதன்படி தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 168 ஆவது படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் இணைந்தது குறித்து, தன்னுடைய திருமண வரவேற்ப்பின் போது கூறி, தலைவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற தன்னுடைய 25 ஆண்டு கனவு நிறைவேறி விட்டதாக தெரிவித்தார்.

எப்போதும் ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது எடக்கு மடக்காக பதிவிட்டு வரும் இவர், தற்போது அழகிய குழந்தையின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு யார் இந்த ஹீரோ? கண்டு பிடியுங்கள் என ரசிகர்களுக்கு டெஸ்ட் வைக்க. இதை பார்த்து ஷாக் ஆன நடிகர் ஜெயம் ரவி ' ஏன் ஏன் இன்னைக்கு இது தேவையா என? சதீஷிடம் கேள்வி எழுப்பினர்.

உடனே சும்மா இருப்பார்களா நெட்டிசன்ஸ்... ஜெயம் ரவி இப்படி அதிர்ச்சியாவதால்... நீங்கள் தான் இந்த புகைப்படத்தில் இருப்பது நீங்களா? என கேள்விகள் அவர் பக்கம் பறந்தது.

Scroll to load tweet…

கடைசியில் ஒருவழியாக சதீஷ்... அழகோ... அழகு சகோ உங்கள் மனது மாதிரியே என சொல்லி ஜெயம் ரவி தான் என்பதை உறுதி செய்து விட்டார். மேலும் பல ரசிகர்கள் இந்த குழந்தையாக புகைப்படத்தில் உள்ளது ஜெயம் ரவி தான் என சரியாக கண்டு பிடித்தும் அசத்தினர்.