சமீப காலமாக நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்துக்கொள்வது வழக்கமாக மாறி வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது இந்திய கிர்க்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் பும்ராவும், நடிகை ராஷி கண்ணாவும் காதலித்து வருவதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

கிரிக்கெட் வீரர்களை மணந்த நடிகைகள்:

ஏற்கனவே பல நடிகைகளை கிரிக்கெட் வீரர்களை காதலித்து திருமணம் செய்துள்ளனர். அப்படி பட்டோடியை ஷர்மிளா தாகூரும், அசாருதீனை சிங்கீத பிஸ்லானியும், ஹர்பஜன் சிங்கை கீதா பஸ்ராவும் மணந்தனர். சமீபத்தில் கூட கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷி கண்ணா காதல்:

இந்நிலையில் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வரும் ராஷி கண்ணா, கிரிக்கெட் வீரர் பும்ராவை அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராஷி கண்ணா கூறுகையில் 'நான் கிரிக்கெட் வீரருடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகிறது... இது முற்றிலும் வதந்தி தான். இப்படி வரும் தகவல்களுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழில் ராஷி கண்ணா:

தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷி கண்ணா தற்போது, தமிழில் நடிகை நயன்தாரா நடித்து வரும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளார். மேலும் அடங்கமறு என்கிற படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.