தமிழகத்தில் பலரும் எதிர்பார்க்காத சில அதிரடி மாற்றங்கள் தற்போது நடந்து வருகிறது, இது சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆகா வேண்டும் என்கிற சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என பல பிரபலங்கள் தங்களுடைய கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

காரணம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் பதவியை ராஜினமா செய்ய, அந்த இடத்திற்கு தற்போது பொது செயலாளர் சசிகலா வந்துள்ளார்.

இந்நிலையில் முதல்மரியாதை, போன்ற பல படங்களில் நடித்த மலையாள நடிகை ரஞ்சனி தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில் ‘தமிழ் நாட்டு மக்களை சசிகலா முட்டாள் என்று நினைத்தாரா? அது எப்படி சசிகலாவை போய் முதல்வராக ஏற்பது? அம்மாவின் பணிப்பெண் என்பதை தவிர சசிகலாவுக்கு என்ன தகுதி உள்ளது.

இதை நான் எதிர்க்கிறேன்’ என ரஞ்சனி கோபமாக தெரிவித்துள்ளார். இவரது கருத்து மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.