தேசிய விருது பெற்ற படமான ஜோக்கர் படத்தில் நடித்து பரவலாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்த நடிகை ரம்யா பாண்டியன் தற்போது ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளார்கள் என்பதை நம்ப முடிகிறதா? ஆம்.. திடீரென ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரம்யா பாண்டியன் தெரிவிக்கும்போது, 

இந்த போட்டோ ஷூட் எதார்த்தமாக மேக்கப் இல்லாமலேயே எடுக்கப்பட்டது. இந்த போட்டோ ஷூட் பட வாய்ப்புக்காக எடுக்கவில்லை. வழக்கமாக நான் எப்போதும் எடுப்பது போல தான் எடுத்தேன். இதற்கு முன்னதாக மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுத்து இருந்தேன்... இதிலிருந்து  சின்ன  மாற்றம் காண்பிப்பதாற்காக தற்போது புடவையில் போட்டோ ஷூட் எடுத்தேன். இன்னும் சொல்லப்போனால் நான் புடவை கட்டி போட்டோ ஷூட் எடுத்தது இதுவே முதல் முறை.

எனக்கு ரோல் மாடலே ராதிகா சரத்குமார், சிம்ரன்,அனுஷ்கா என பலர் சொல்லலாம். இருந்தாலும் கூட இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் பெர்சனாலிட்டி எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.