தேசிய விருது பெற்ற 'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். முதல் படத்தில், எண்ணெய் வைத்த தலை, சேலை, மஞ்சள் தேய்த்த முகம் என கதாப்பாத்திரத்தை உள்வாங்கி நடித்து அசத்தினார். இந்த படத்தை அடுத்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக 'ஆண் தேவதை' படத்தில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. 

திரைப்படத்தில் நடித்து கிடைக்காத புகழை, திருச்சி பொண்ணு ரம்யா பாண்டிகையானுக்கு கிடைக்க வைத்தது, பச்சை சேலையில் தன்னுடைய இடுப்பு, மடிப்பை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படங்கள்.  ஓவர் நைட்டில் புகழின் உச்சிக்கே சென்றார்.  

அதுவரை யாரென்றே தெரியாமலிருந்த ரம்யா பாண்டியன், இந்த புகைப்படங்கள் மூலம் பட்டி தொட்டி ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். அப்போதைக்கு பிரபலங்கள் சிலர் கூட, இவரை தன்னுடைய படத்தில் கமிட் ஆக கேட்டாலும், பிடித்தால் புளியம் கொம்பாகத்தான் பிடிப்பேன் என விடாப்பிடியாக இருந்தார் ரம்யா பாண்டியன். 

இவரின் காத்திருப்புக்கு கிடைத்த பரிசாக தான், தற்போது இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது. திரைப்பட நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், பல முன்னணி நடிகர் நடிகைகளை வளர்த்து விட்ட தொலைக்காட்சி ஒன்றிலும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கினார். இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்த பலர் உள்ளனர்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஃபேமஸ் ஆகி வந்த ரம்யா பாண்டியனுக்கு சிறு பிரேக் கொடுத்துள்ளது, இந்த ஊரடங்கு ஓய்வு. இதனால் தொடர்ந்து விதவிதமாக வெளியிடும் போட்டோ ஷூட் கூட நடத்தாமல் இருந்தார் ரம்யா.

இவர் வெகு நாட்களாக சமூக வலைதளத்தின் பக்கம் தலை காட்டாததால், இவரின் பாசமான ரசிகர்கள் பலர் தொடர்ந்து இவரிடம் நலம் விசாரித்து கொண்டு, புகைப்படங்கள் வெளியிட வேண்டும் என்று அன்பு கோரிக்கை வைத்து வந்தனர். அந்த வகையில், தன்னுடைய ரசிகர்களுக்காக ஆசையாய் ரம்யா பாண்டியன் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். 

பூ செடிகளுக்கு பக்கத்தில் அமர்ந்து, வெள்ளை நிற உடையில் தேவதை போல் ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அல்லி வருகிறது. இதில் நான் பர்பெக்ட் இல்லை ஆனால் நான் நானாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I may not be perfect, but i am always ME 😋💃 Photography @sanjaysooriya Costumes @label_ts_official #ramyapandian

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on May 28, 2020 at 7:11am PDT